Can Everyone Learn?

எல்லோராலும் படிக்க முடியுமா?

மும்பையில் ஆட்டோ ஒட்டும் தமிழகத்தை சேர்ந்த, ஆட்டோ டிரைவர் ஜெயக்குமாரின் இரண்டாவது மகள் பிரேமா வாடகை வீட்டில் வசித்து வந்தும், பள்ளிக்கல்வியை தமிழ் மீடியத்தில் படித்தும், “சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்’ தேர்வில், 800க்கு, 607 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவரால் முடிந்தது உங்களாலும் முடியும். பிரேமாவிற்கு, தமிழக அரசின் சார்பில், 10 லட்சம் ரூபாய், ஊக்கத் தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
முத்தாய்ப்பாக... சி.ஏ. படிப்பது என்று தீர்மானமாக முடிவு செய்துவிட்டால், அசாத்திய உழைப்பு தேவை. கம்பெனிச் சட்டங்கள், வரிவிதிப்பு விதிகள், கணக்கெழுதும் முறைகள் என ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரமாவது படித்தால், சி.ஏ. ஆவது உறுதி. இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி இப்போது 8 சதவிகிதத்துக்கு மேல் இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் 10 சதவிகிதத்துக்கு மேல் வளர்ச்சி காணும்போது இன்னும் நிறைய ஆடிட்டர்கள் நமக்குத் தேவைப்படுவார்கள்.

ஐ.சி.டபிள்யூ.ஏ.(இந்திய உற்பத்திச் செலவு மற்றும் மேலாண்மைக் கணக்காளர்கள்) காஸ்ட் அக்கவுன்டிங் என்கிற இந்த படிப்பு பற்றி பலருக்கும் தெரிவதில்லை. எல்லா நிறுவனங்களுக்கும் ஆடிட்டிங் முக்கியம் என்கிற மாதிரி தொழிற்துறைக்கு காஸ்ட் அக்கவுன்டிங் முக்கியம். ஒரு பொருளை தயாரிக்க ஆகும் செலவுகள், அதற்கான முதலீட்டு ஆதாயங்களைப் பற்றி நிறுவனங்களுக்குத் தெரிவிப்பது காஸ்ட் அக்கவுன்டன்டின் முக்கிய பணி. தற்போது நிதிக்கணக்கியல், மேலாண்மை கணக்கியல், செலவுக்கட்டுப்பாடு, நிதிப்பயன்பாடு, நிதித்தணிக்கை, வியாபார நுணுக்கம், புதிய முதலீடு போன்றவற்றிற்கு ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஆட்கள் தேவைப்படுகிறது.இதற்கு ஐ.சி.டபிள்யூ.ஏ., படித்தவர்கள் அதிகமாக தேவைப்படுகின்றனர். இப்பாடப்பிரிவில் சேர வயது வரம்பு கிடையாது. பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். வணிகவியல், வணிக நிர்வாகவியல் போன்ற இளநிலைப் பாடப்பிரிவுகளை படித்தவர்களுக்கு ஐ.சி.டபிள்யூ.ஏ., எளிதானதாக இருக்கும். ”இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட் அண்ட் வொர்க் அக்கவுன்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா’என்கிற கொல்கத்தாவில் இருக்கிற இன்ஸ்டிடியூட் மூலமாகத்தான் ஐ.சி.டபிள்யூ.ஏ. படிப்பை படிக்க முடியும். பிளஸ்டூ முடித்தவுடன் இந்த இன்ஸ்டிடியூட்டிற்கென நாட்டில் உள்ள 423 மையங்களில்ஏதேனும் ஒன்றில் விண்ணப்பித்து படிப்பைத் தொடங்கலாம். ஒவ்வொரு வருடமும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் மட்டும் தேர்வு நடைபெறும். வருடத்தில் எந்த மாதத்தில் வேண்டுமானாலும் இந்த படிப்பை படிக்க விண்ணப்பிக்கலாம். ஆனால், ஜூன் மற்றும் டிசம்பரில்தான் தேர்வு எழுத முடியும். ஐ.சி.டபிள்யூ.ஏ. படிப்பில் மூன்று நிலைகள் உள்ளன. • ஃபவுண்டேஷன் • இன்டெர்மீடியேட் • ஃபைனல் ஸ்டேஜ் என இந்த மூன்று நிலைகளை ஒவ்வொன்றாக முடிக்க வேண்டும். சி.ஏ. படிப்பில் வரக்கூடிய காஸ்டிங், அக்கவுன்ட்ஸ், வரி மற்றும் சட்டப் படிப்புகள் இந்தப் படிப்பிலும் இருக்கிறது. பி.எஸ்.சி., இன்ஜினீயரிங் என எந்த இளநிலை பட்டம் முடித்தவர்களும் இந்த காஸ்ட் அக்கவுன்டிங் படிப்பை படிக்கலாம். இளநிலை பட்டம் பெற்றவர்கள் நேரடியாக இன்டெர்மீடியேட் நிலைக்குப் போகலாம். அவர்கள் ஃபவுண்டேஷன் நிலை படிக்க வேண்டியதில்லை. இன்டெர்மீடியேட் நிலையில், இரண்டு குரூப் இருக்கிறது. இந்த குரூப்பில் மூன்று பேப்பர்கள் இருக்கும். இந்த மூன்று பேப்பர்களிலும் தலா 40 மதிப்பெண் குறைந்தபட்சமாகவும், மூன்று பேப்பரின் மதிப்பெண்னை கூட்டினால் 150 மதிப்பெண்களும் வர வேண்டும்.இந்த இரண்டு கண்டிஷனில் ஒன்று தவறினாலும் அந்த குரூப் பேப்பர்கள் அனைத்தையும் எழுத வேண்டும். இப்படிதான் ஃபைனல் நிலையும் இருக்கும். ஒரே நேரத்தில் பல விஷயங்களை செய்யக்கூடிய திறன் படைத்தவர்களால்தான் திறமையான காஸ்ட் அக்கவுன்ட்டன்ட்-ஆக பணிபுரிய முடியும். அதற்கு தகுந்த வகையில் மாணவர்களை தயார்படுத்துகின்றனர். இந்த தேர்வுக்கு ஐ.சி.டபிள்யூ.ஏ. இன்ஸ்டிடியூட் மூலமாகவும், தனியார் பயிற்சி மையங்கள் மூலமாகவும் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். இறுதித் தேர்வு முடிந்து தேர்ச்சியடைந்த பின்பு ஐ.சி.டபிள்யூ.ஏ. உறுப்பினராக பதிவு செய்துகொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு :இந்தியாவில் சுமார் எட்டு லட்சம் நிறுவனங்கள் இருக்கிறது. ஆனால், குறைந்தளவிலேயே காஸ்ட் அக்கவுன்ட்டன்டுகள் இருக்கிறார்கள். இந்த படிப்பை முடித்தவர்கள் வேலைக்கும் போகலாம் அல்லது சொந்தமாக காஸ்ட் அக்கவுன்டிங் பிராக்டீஸ் செய்யலாம். வேலைக்குப் போக நினைக்கிறவர்கள் இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களில் ஃபைனான்ஸ், டிரஷரி, பட்ஜெட்டிங், காஸ்டிங், ஃபாரக்ஸ் மேனேஜ்மென்ட், இன்டெர்னல் ஆடிட்டிங் போன்ற வேலைகளுக்குச் செல்லலாம்.இந்த படிப்பில் நல்ல ரேங்க் ஹோல்டர், கிரேடு வாங்கியவர்கள் எனில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் கொடுக்கிறார்கள். அமெரிக்காவிலும் பிராக்டீஸ்: ஐ சி டபிள்யூ ஏ ஐ ‘ ( இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட் அண்ட் வொர்க்ஸ் அக்கவுன்ட்ஸ் ஆஃப் இந்தியா ) யில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் இந்த பட்டத்தை கொண்டே அமெரிக்காவிலும் பிராக்டீஸ் செய்யலாம். அதற்கான அங்கீகாரத்தை அமெரிக்காவில் இருக்கும்’ ஐ எம் ஏ ‘ ( இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் அக்கவுன்ட்டன்ஸ் ) யிடம் ‘ ஐ சி டபிள்யூ ஏ ஐ ‘ பெற்றிருக்கிறது. இரு இன்ஸ்டிடியூட்களும் இதற்கான பரஸ்பர அங்கீகாரத்தை கொடுத்து ஒப்பந்தம் செய்திருக்கின்றன.ஆனால் ஐ எம் ஏ யில் உறுப்பினர்களாக இருக்க விரும்புபவர்கள், ஐ சி டபிள்யூ ஏ ஐ யிலும் தொடர்ந்து உறுப்பினாக இருக்க வேண்டும். இந்தியாவில் காஸ்ட் அக்கவுன்டிங் படித்து தகுதி பெற்றவர்கள் 42,000 பேர் இருந்தாலும் 29,000 பேர் மட்டுமே ஐ சி டபிள்யூ ஏ ஐ யில் உறுப்பினர்களாக பதிவு செய்திருக்கிறார்கள். அதிலும் வெறும் 1,700 உறுப்பினர்கள் மட்டுமே காஸ்ட் அக்கவுன்டன்ட்களாக பிராக்டீஸ் செய்கிறார்கள். மீதி பேர் நிதி மற்றும் அக்கவுன்டிங் துறையில் பணியாற்றுபவர்களாகவே இருக்கிறார்கள் ஏ.சி.எஸ். (கம்பெனி செகரட்டரிஷிப் ) நிர்வாகத்தின் முக்கிய நிலைகளில் பணியாற்றும் பொறுப்பு உள்ளதால் இந்த பதவியில் திறமைக்கு ஏற்ப நல்ல சம்பளங்களை பெற முடியும். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து தங்கள் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ள இந்த நிறுவனம் மூன்று நிலைகளில் தேர்வுகளையும் இரு நிலைகளில் உறுப்பினர் அந்தஸ்தையும் வழங்குகிறது. தென்னிந்திய மண்டல அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்கள், முந்தைய ஆண்டுக்கான கேள்வி -பதில் புத்தகம், இன்ஸ்டிடியூட் வெளியிடும் புத்ககம் கிடைக்கிறது. மாணவர்களை நேரடியாகச் சேர்க்கும் முறையும் உண்டு. மாணவர் சேர்க்கையில் உடனடி சேர்க்கையும் உண்டு. மேலதிக தகவல்களுக்கு…. Deputy Director, The Institute of Company Secretaries of India, No:9, ICSI – SIRC House, 9, Wheat Crofts Road, Nungambakkam, Chennai-34 Tel: 044- 2827 9898, 2826 8685. Fax: 044 2826 8685 Website: www.icsi.edu; Email: icsisirc@md3.vsnl.net.in